நிழல் கவிதை தூரிகை முத்துக்கள்
அன்னையின் நிழலில் அன்பையும்
தந்தையின் நிழலில் அறிவையும்
பள்ளியின் நிழலில் கல்வியும்
இயற்கையின் நிழலில் ஆரோக்கியம்
இல்லற நிழலில் மலர்ச்சியும்
மனைவியின் நிழலில் மகிழ்ச்சியும்
மக்கட்பேறு நிழலில் பூரிப்பும்
முன்னோர் நிழலில் தைரியமும்
பணியின் நிழலில் நிம்மதியும்
கடமையின் நிழலில் மதிப்பும்
உறவின் நிழலில் குதூகலமும்
நட்பின் நிழலில் நல்வழியும்
பெறுகிறோம்!
கெட்டவை நிழலில் தீயவையும்
கூடாநட்பு நிழலில் கெடுதலும்
தீயநட்பு நிழலில் அழிதலும்
சினிமா நிழலில் ஏமாற்றமும்
பெறுகிறோம்!
ஆணவ நிழல் இருளும்
பேராசை நிழல் அழிவையும்
தற்பெருமை நிழல் கீழ்மையும்
பொறாமை நிழல் தீயவையும்
பெறுகிறோம்!
நல்லோர் நிழலில் வாழ்ந்து
அறசேவை நிழலில் பயணித்து
சான்றோர் நிழலில் கால்பதித்து
நல்வாழ்வு பெறுவோமாக..!









Comments
Post a Comment