வ .உ .சிதம்பரனார் | 38 | கவிதை
செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்
சிறப்பாக வழக்கறிஞர் தொழிலை செய்தவர்
திறம்பட வாதாடி செல்வம் சேர்த்தவர்
லஞ்ச வழக்கில் நீதிபதிக்கே தண்டனை
பெற்றுத் தந்தவர் !
சிறந்த இலக்கியவாதி என்பர்
சிறந்த பலநூல்களை இயற்றியவர்
ஆங்கிலயருக்கு எதிராக போராடியவர்
தூத்துக்குடி, கொழும்புக்கு கப்பல்
விட்டவர்!
கல்லையும் கரைய வைக்கும் இறுதிகாலம்
கண்ணீர் சிந்த வைக்கும் இல்வாழ்க்கை
வறுமை பிடியில் சிக்கி தவித்தவர்
வறுமை துரத்தியது காலத்தின் ஓட்டம்
என்பர்!
நாற்பது ஆண்டு காலம் சிறைவாசம்
சிறையில் சணல் கயிற்று சுற்றியும்
சிறையில் கல்லை உடைத்து வெய்துறுதலனார்
சிறையில் செக்கிழுத்து கொடுமை அனுபவித்தவர்
என்பர்!
இல்வாழ்க்கை வறுமையின் விளிம்பில் நின்றதும்
மண்ணென்னய் விற்று வாழ்க்கை நடத்தியதும்
அரிசியை விற்று வாழ்க்கை கழித்தமையும்
நெய் விற்று வாழ்க்கை நகர்த்தியமையும்
இதயம் கண்ணீர் சிந்தவைக்கும்!
தான் செலுத்திய கப்பலை விற்றதும்
தன் பரம்பரை சொத்து அழிவுற்றதும்
தன் பிள்ளை படிப்பிற்கு பணமின்றியும்
தன் பிள்ளை மூத்தமகன் இறந்ததும்
கண்ணீர் மல்க வைக்கும்!
மனதில் வலுவான போராளி
ஆளுமை மிக்க மனிதர்
மக்கள் செல்வாக்கு மிகுந்தவர்
தத்துவம், பக்தியில் ஈடுபாடுவுடையவர்
இந்த தேசத்திற்காக தன்
உடல்
பொருள்
ஆன்மா அனைத்தையும் தந்தவர்
வ.உ. சிதம்பரனார்
சுதந்திரத்திற்குப் போராடிய தியாகிகளை நினைப்போம்
சுதந்திர தியாகிகளை வணங்கி நிற்போம்
72- ஆவது குடியரசு தினநாளிலே....!
Comments
Post a Comment