மனிதன் | 41 | கவிதை
உறவின் சந்திப்பின் போதும்
நண்பரைக் காணும் நேரத்தும்
தொழில் செய்யும் இடத்திலும்
இயற்கை படைக்கப்பட்ட வளத்தையும்
இயற்கை உயிர்பித்த உடலுக்கும்
இயற்கை உணவளித்த பூமிக்கும்
கடவுளாக நினைத்துவிடு!
இல்வாழ்க்கை இல்லற வட்டத்திலும்
இனிதாக பயணிக்கும் கடமையிலும்
இணைந்து வாழும் உறவுயினத்திலு
பொறுமையைக் கடைப்பிடி!
இறைவன் கொடுத்த இல்வாழ்க்கையிலும்
இறைவன் பரிசுகொடுத்த மனிதபிறவிக்கும்
இறைவன் அருளிய திறமைக்கும்
மனதால் மகிழ்ந்து விடு!
இல்லற துணைவியின் பணிவிடையிலும்
இல்லற மக்கட்பேறு வளர்ப்பதிலும்
இன்னலை கொடுத்த மாந்தரிடத்திலும்
மன்னித்தலை காட்டிவிடு!
ஆறறிவு மாந்தரிடம் காட்டுவதும்
ஆனந்தமாக பறக்கும் பறவையிடமும்
ஓரறிவு ஜீவராசி உயிரிடமும்
இறக்கம் காட்டி விடு!
தர்மம் தழைக்குமே!
இளமையில் விடாமுயற்சியில் படித்துவிடு
இளமையில் விடாமுயற்சியில் அனுபவம்பெற்றுவிடு
இளமையில் விடாமுயற்சியில் உழைத்துவிடு
தோல்வி சூழ்ந்தாலும்
வெற்றிப்பாதை ஆக்குமே!
முழுமனதாக வணங்கி நின்றுவிடு
முழுமனதாக இயற்கையைப் பாதுகாத்துவிடு
முழுமனதாக உள்ளத்தை ஒன்றிவிடு
எந்த சூழ்நிலையிலும்
இறைவனை நினைத்துவிடு!
உன் அனுபவம் புதுமையாக
உன் பாதை தெளிவாக
உன் லட்சியம் இலக்காக இருப்பது
உன் வாழ்வில் மாற்றமாகும்
உன் வாழ்வு செழிப்பாகும்
என்பரே....!💮☘️
Comments
Post a Comment