தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

உறவு | 42 | கவிதை





                                             உறவு | 42 | கவிதை    









பிரச்சனை பலவிதம் என்பர்
பிரச்சனை பலதீர்வும் என்பர்
பிரச்சனை உண்மையின் வெளிப்பாடு
பிரச்சனை நடத்தையின் செயல்பாடு
                                                என்பர்!
உறவால் வரும் பிரச்சனை
நட்பால் உருவாகும் பிரச்சனை
கடமையில் உண்டாகும் பிரச்சனை
உடலில் தோன்றும் பிரச்சனை
                                       என்பர்!
உறவால் வரும் பிரச்சனை
உலகில் நிலவும் முக்கியமானதே
உறவால் வரும் பிரச்சனை
ஒற்றுமை குழைக்க வழிவகுக்குமே!

கூட்டுக் குடும்பம் சிதைந்து போனதும்
நிறைய முதியோர் இல்லம் உருவானதும்
நிறைய அனாதை ஆசிரமம் தோன்றியதும்
உறவின் உன்னதங்கள் புரியாமையே!

உறவு என்று கொண்டாடியது - இன்று
உறவு வெட்டி வாழ்கின்ற ஓட்டமே!
நட்பு என்று அரவணைத்தது- இன்று
நட்புநேசம் விலகி நிற்கின்ற ஓட்டமே!

ஒட்டி வாழும் உறவை மறந்தமை
கட்டி அரவணைத்த அன்பு தோன்றாமை
அறநெறி மனதினில் மறந்து நின்றமை
பெருநெறி வழிமுறை மனதினில் இல்லாமை
                                                    என்பர்!
பிறந்த தொப்புள் கொடியின் உறவுகள்
திருமண பந்தங்களால் வந்தன உறவுகள்
நட்பால் மலர்ந்த நேச உறவுகள்
திறமையால் பூத்த அன்பு உறவுகள்
                                                  என்பர்!
பெற்றோர் பிள்ளையை அரவணைத்துச் செல்வதும்
பிள்ளைகள் பெற்றோரை மதித்து நடப்பதும்
உறவுகளில் உன்னதங்கள் மேம்படும் - என்றும்
வேற்றுமை விலகி மனம் லேசாகுமே !

உறவை உன்னதமாக மதிக்கும் போதும்
உறவில் விரிசல் இல்லாது போகும்
உலகமும் உறவும் நன்கு சீர்பெறும்
உலகில் பிரச்சனை இல்லாமல் அமைதிபெறும்

மனதினில் அன்பும்
                      பண்பும்
                      பணிவும்
                      பாசமும்
                      நேசமும் வந்து குடியேறும் !
இல்லற உறவு பயணத்தில்
அமைதி பயணமாக பயணிக்குமே....!






















                                  திருக்குறள் செம்மல் விருது - தஞ்சை 








வாழ்க்கை சக்கரத்தின் நினைவலைகள்
விழியின் புருவம் அசையவைப்பதும்
கொடியும், கொம்புமாக ஓடியகாலங்கள்
மலரும், தேனுமாக  சுவைகாலங்கள்
        இதயத்தின் பக்கம் புரட்டும்போது
        இதயத்தில் பூமழை சாரலாகிறது
        ஆழ்ந்த சிந்தை சோலையாகிறது...!







Comments