சித்திரை | 44 | கவிதை
மனம் கனியாகவும்
சிந்தை தேனாகவும்
முகம் மலராகவும்
எண்ணம் பனிமலராகவும்
சொல் முத்துச்சரமாகவும்
செயல் பூச்சரமாகவும்
பண்பு பூங்காற்றாகவும்
தரும் சித்திரைமாத நாளே!
தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகவும்
தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை பெளர்ணமியாகவும்
மூன்றாவது பிறை தோன்றும் நாளாகவும்
முன்னோர் அட்சய திருநாளாக கொண்டாடும்
நாளே !
மாந்தருக்கு திருமகள் அருளும்
மாந்தரின் வினைகள் அகலும்
மாந்தரின் ஆயுளை விருத்தியாகும்
மாந்தருக்கு யோகம் அளித்திடும்
நாளே!
தானம்செய்து செல்வம் தங்கும்நாளே!
ஆலயதரிசனம் செய்து வாழ்வில்
வசந்தகாலமாக மாற்றும் சித்திரைநாளே!
இயற்கை வேப்பம் பூக்களை
இயற்கை உணவாக சேர்த்தும்
நோயற்ற உடலாக மாற்றவதும்
வாழ்வின் தத்துவம் சொல்வதும்
சித்திரைமாத நாளே !
Comments
Post a Comment