தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

குணம் | 45 | கவிதை

 

                                               குணம்  |  45   |  கவிதை

                             

                         


 


எண்ணம் பகை உணர்வில்
சிந்தை தடுமாற்ற நிலையில்
உணர்வு தவறில் வசப்படுதல்
சொல் வஞ்சத்தில் விழுதல்
                     ராஜோ குணம்
                     முள்முகம் என்பர்!
செயலில் சோம்பல் தழுவியும்
அறிவில் நிறமாறும் குணமும்
பண்பில் தாழ்வு எண்ணமும்
பொறுமை தன்மை குறைவும்
                      தமோகுணம்
                      சகதிமுகம் என்பர்!
கடமையில் நேர்த்தி நிறைந்தும்
இல்லறத்தில் அன்பு, அரவணைப்பும்
குணத்தில் சாந்தம் நிறைந்தும்
குன்றா நேசம் உள்ளமும்
                       சத்வகுணம்
                       பொன்முகம் என்பர்!
இல்லத்தில் சத்வகுணம் நிறைவதும்
வாழ்க்கை அற்புதமாகத் திகழும்
அறம் தழைத்து நிற்கும்
அன்பு செழித்து வளரும்
                                  என்பர்....!
குணம் நேர்த்தியின் போது - அங்கு
மனம் செம்மைபடும் என்பர்!
மனம் செம்மைப்படும் போது - அங்கு
குடும்பம் செழிப்படையும் என்பர்!

குடும்பம் செழிப்படையும் போது - அங்கு
இல்லற உறவு மேம்படும்
உறவு மேம்படும் போது - அங்கு
நாடு சீர்படும் என்பர்!

நாடு சீர்படும் போது - அங்கு
முன்னேற்றம் மேலோங்கி நிற்கும்
முன்னேற்றம் மேலோங்கும் போது - அங்கு
சமுதாயம் சுபிட்சம் அடையும்
                மகிழ்ச்சி பாதையில் நின்று
                மகிழ்வு பயணமாக பயணிப்போம்

                                                  என்றுமே....!
















                                     கண்விழியில்  நின்றவை   













Comments