மனத்தூய்மை | 46 | கவிதை
பூமியில் இறப்பு இல்லையெனில்
பூலோகத்தில் இருக்க இடமிருக்காது
ஆணவ அதிகாரம் தலைவிரித்தாடும்
அதீதபேராசை கடல்போல் ஆகிவிடும்
மண்ணில் இறப்பு இல்லையெனில்
ரோமாபுரி சாம்ராஜ்யம் பிணமாகியிருக்கும்
உலகப்பேரழகி கிளியோபாட்ராவால் என்பர்!
இந்த உலகம் சுற்றவில்லையெனில்
எந்த உயிரினமும் இருக்காது
இரவும், பகலும் தெரியாமல்போகும்
இனிய விடியற்காலை இல்லாமல்போகும்
இந்த உலகம் முழுவதும் போதாது
என்று மார்பைத் தட்டிக்கொண்டு சொன்னவர்
கல்லறைக் குழி போதுமானதாகியது
மகா அலெக்சாண்டருக்கு
பதவியின் அதிகாரம் ஆடவைப்பதும்
பணபலம் கர்வம் வரவழைப்பதும்
பிடிவாதம் குரங்காக மாறும்போதும்
பேச்சில் பொய்கள் நிறையும்போதும்
ஆனானப்பட்டவர்கள்,ஆட்டமெல்லாம் அடங்கியது
அடையாளம் தெரியாமல் போனது
சாவைக்கண்டு நடுங்கி ஒடிங்கிபோனான்
ஹிட்லர்
வஞ்சகக் கூட்டுச் சதியும்
வஞ்சிக்கும் இதய அழுத்தமும்
மிரட்சிக்கும் அதிகார ஆட்டமும்
மறைவில் தொடுக்கும் கணையும்
கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம்
கூட்டு சேர்ந்த பதவி அதிகாரம்
இறந்த போது தொங்கவிட்டு அடித்தனர்
முசோலினை
ஆணவம்
அதிகார பிடிவாதம்
பேராசை என்பர்
தேகம் நோய்வாய்பட்டு
ரத்தம் சுருங்கியபின்
- எதுவும்
நம்மை காப்பறை வரப்போவதில்லை
பசித்தவனுக்கு உணவு கொடு
இல்லாதவனுக்கு உடை கொடு
எல்லோரை நேசித்து வாழ்
மனத்தூய்மை இருந்து வாழ்
நம்மை பாடம் கற்றுக்கொடுத்தது
நம்மை முன்னோர் சொன்ன வழிமுறை
மனதை செம்மைப்படுத்தி வாழ்வது
மகிழ்வு பயணமாக பயணிப்பது
சிறப்பே..
Comments
Post a Comment