முருங்கை | 47 | கவிதை
நோயை விரட்டும் மரங்கள் பலவகை
மரத்தின் பயனை அறியாதவர் பலர்
அனைத்து இடங்களில் வளரும் மரம்
உருவத்திற்கு பயன்படா மரம்
வலுவில்லா மரம் என்றாலும்
வலுவை பிறருக்கு கொடுக்கும்
உடல் திறனோடு வாழ்விக்கும்
உடலை புத்துணர்ச்சி கொடுக்கும்
வேகமாக பூத்துக் குலுங்கும்
வெண்பூ விருத்தியை உண்டாக்கும்
நீண்ட வடிவமான காயும்
நிறைந்த முத்துக்கள் கொண்டதும்
இளமைக்கு பொலிவை தருவதும்
முதுமையில் கோலூன்றாமல் நடக்கவைப்பதும்
ஆரோக்கிய எதிர்ப்பு சக்திக்கும்
இரும்புச்சத்து நிறைந்து இருப்பதும்
முந்நூறு நோயை விரட்டும்
ஒளிபடைத்த கண்ணுடன் இருக்கச் செய்வதும்
சோர்வற்று எதிர்ப்பு சக்திக்கும்
பிரமிப்பான நன்மையைத் தருபவையும்
முருங்கை மரம் என்பர்!
வலுவில்லா மரமாக பூத்துக் குலுங்கினாலும்
விரிந்த இதயமாக இலைகள் தழைத்தும்
தூய்மை எண்ணமாக கொத்தான பூக்களும்
திண்ண சிந்தையாக மாற்றுவது காயும்
பிறருக்கு வாரித்தரும் மரமாகவும்
பிறருக்கு வலிமைதரும் மரமாகவும்
இருப்பது முருங்கை மரம்!
அதிகாரம் இல்லாதவனாக இருப்பினும்
பிறருக்கு நற்பாதை காட்டி
நின்றிவிடு
வலுவில்லா உடலாக இருப்பினும்
பிறருக்கு நம்பிக்கை வார்த்தை
சொல்லிவிடு
முருங்கை மரத்தின் இலைபோன்றும்
காய்போன்றும்
பூவைபோன்றும்
பிறருக்கு வலுவான வார்த்தையாகவும்
பிறருக்கு நற்பாதை காட்டுவதகாவும்
இருப்பது வாழ்வின் சிறப்பே..!
கண்விழியில் நின்றவை
Comments
Post a Comment