தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

வலைத்தளம் | 48 | கவிதை

                                                

                                                வலைத்தளம்  |  48 | கவிதை   




வலைதளத்தில் உலாவும் கருநாகங்கள்
ஊடகத்தில் மின்னும் பொய்விமர்சனங்கள்
எழுத்துமுனை பொய்யாக்கும் கள்வர்கள்
சொல்விதை போலியாக தூவுபவர்கள்
                                பொருளாசையிலே !
சமுதாயத்தை பிளவுசெய்யும் கோடாரிமுகங்கள்
சமூகத்தை குழப்பும் கல்முகங்கள்
தனிமனிதனை கெடுக்கும் விஷமுகங்கள்
இளஞ்நெஞ்சை முள்ளாக்கும் கூர்முகங்கள்
                                              பொருளாசையாலே!
இல்லறம் என்ற கோவிலை உடைத்தும்
தாய்மை என்ற பாசம் வெட்டியும்
தாரம்  என்ற அன்பு விலகியும்
மைந்தன் என்ற இரத்தம் இல்லாதும்
                                    வாழும் மாந்தரே!
பொருளுக்கு சிந்தனை
                         உள்ளத்தை
                         சொல்லை
                          எழுத்தை விற்கும் மாந்தரே!
சமுதாயம் செம்மைபட செய்வதில்லை
சமூகம் சீர்படுத்த முயற்சிபதில்லை
இல்லறம் கோவிலாக நினைப்பதில்லை
மனிதனை நல்லவர்களாக ஆக்கவிடுவதில்லை
                                                         என்பர்!
சிந்தனையில் முள்சரம் இருப்பதாலும்
உள்ளத்தில் அரக்கண் வாழ்வதாலும்
நாளத்தில் நஞ்சு கலந்திருப்பதாலும்
பாரம்பரியத்தில் வன்பாடு நிறைந்திருப்பதாலும்

                                                     என்பர்!
பார்க்கும் வானமும்
பொழியும் மழையும்
வீசும் காற்றும்
ஒளிரும் கதிரவன்
பொன்னான மண்ணும்
        இயற்கை எனும் கடவுள்
        ஈனசெயலுக்கு பதில் சொல்லுமே!
இயற்கையை வணங்கி நிற்போம்
கருணைையை உள்ளத்தில் வளர்போம்
நேசத்தை இதயத்தில் விதைப்போம்
நல்வழி பாதையில் பயணித்து
                 மகிழ்வோமாக என்றும்....!









                          கண்விழியில் நின்றவை
























Comments