உள்மனம் | 50 | கவிதை
நடக்கும் குழந்தையின் உள்ளம் கண்ணாடி
படிக்கும் இளைஞனின் உள்ளம் முகக்கண்ணாடி
இல்லறத்தான் உள்ளம் முழுவுருவக் கண்ணாடி
சான்றோரின் உள்ளம் கோவில் கண்ணாடி
உள்ளம் கோணலானால்- அங்கு
உண்மை மடிந்து போகும்
உள்ளம் பொய்யானால்- அங்கு
ஊமையாகும் நீதியின் பக்கம்
உள்ளம் எதிர்மறை எண்ணமாவதும்
கெட்டவை சிந்திப்பதும்
தவறுபாதையில் செல்வதும்
நிறமாறும் மாந்தராவதும்
உள்மனமே!
உயர்வு நிலையை அடையவும்-அங்கு
உயர்ந்த செயல் நடக்கச் செய்வதும்
உயர்ந்த பண்பு பிறப்பதும்-அங்கு
உள்ளமெனும கேடயம், ஆயுதம்
உள்மனமே!
நம்மை பள்ளத்தில் தள்ளிவிடுவதும்
நம்மை அழிவை ஏற்படுத்துவதும்
நம்மை மதிப்பை வரவழைப்பதும்
உள்மனமே!
உள்ளம் கள்ளமானால்
வாழ்வு பள்ளமாகும்
உள்ளம் நெறிதவறினால்
வாழ்வு அழிவாகும்
உள்ளம் கலைக்கூடம் போன்றது
உள்ளம் மலர்த்தோட்டம் போன்றது
செதுக்கும் சிற்பம் காயமாவதும்
செம்மலர் கையால் பறிப்பதும்
புதுமைக்கே!
கடலில் முத்தெடுக்க வேண்டுமெனில்-மாந்தர்
கடலில் மூச்சடக்கித்தான் முத்தெடுக்க வேண்டும்
உள்ளம் உன்னதமடைய வேண்டுமெனில்,- மாந்தர்
உள்ளத்தை அடக்கித்தான் ஆகவேண்டும்
காலையில் வண்ணமலராக மணம் கமழ்ந்திடும்
மாலையில் காய்ந்து உதிரும் மலராகவும்
மரத்தில் இளந்தளிர் சருகாகி உதிர்ந்திடும்
மரத்தில் மீண்டும் துளிர்வதும்
புதுமைக்கே!
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
நம் உள்ளத்தை புதுபித்துக் கொள்ள
சொல்லித்தரும் பாடமாகும்
கிடைத்த வாழ் நாட்களை சீர்மையாக
வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும்
உவகை கொள்வோமாக....!
Comments
Post a Comment