உழைப்பு | 51 | கவிதை
பறக்கும் வண்ணச் சிட்டுக் குருவிகள்
நீரில் நீந்தும் குட்டி மீன்கள்
தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகள்
மலரை தேடிப் போகும் தேனீக்கள்
உழைப்பைக் காட்டுவதே!
உண்மை உழைப்பு மகிழ்வையும்
நேர்மை உழைப்பு மனநிறைவும்
உழைப்பு செயலின் சிறப்பிற்கும்
உழைப்பு செயலின் புதுமைக்கும்
என்பர்!
உழைப்பு இல்லா நாகரீகம் இல்லை
வளர்ச்சி இல்லை
எழுச்சி இல்லை
புத்தெழுச்சி இல்லை
உடல் உழைப்பு விவசாயம், நெசவும்
பேச்சு உழைப்பு காவியம், கற்ப்பித்தலும்
சிந்தை உழைப்பு விஞ்ஞானம், தொழிற்நுட்பம்
கரத்தின் உழைப்பு கலையும், நாட்டியமும்
குழந்தையின் உழைப்பு விளையாட்டும்
இளைஞனின் உழைப்பு கல்வியறிவும்
இல்லறத்தான் உழைப்பு பணியிலும்
சான்றோர் உழைப்பு அறிவுரையிலும்
உழைப்பால் உயர்ந்தவர் ஜி.டி. நாயுடு
சிந்தையில் சாதித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன்
பேச்சால் புகழ்ந்தவர் அறிஞர் அண்ணா
வீரத்தால் வென்றவர் மகா அலெக்ஸ்சாண்டர்
உழைப்பே!
பொருள் உழைப்பின் மூலம் பெறலாம்
அந்தஸ்து உழைப்பின் மூலம் ஜொலிக்கலாம்
பண்பு உழைப்பின் மூலம் பிரகாசமாகும்
மதிப்பு உழைப்பின் மூலம் உயர்வாகும்
கல்லை உடைத்தால் மண்ணாகும்
கலப்பை உழுதால் பொன்னாகும்
கல்லை செதுக்கினால் சிற்பமாகும்
கல்வி கற்றால் அறிஞராகலாம்
உழைப்பே!
அடிமைபோல் உழைத்தால் - என்றும்
அரசனை போல வாழலாம்
முயற்சியோடு உழைத்தால் - என்றும்
முத்தேவர் போல வாழலாம்
உழைப்பு உடலைப் பலப்படுத்தும்
உழைப்பு வெற்றியின் இரகசியம்
ஏழ்மை நோய்யை விரட்டவும்
உழைப்பு உயர்வை ஈட்டும்
உழைப்பு மனிதனை தெளிவாக்கும்
உழைப்பு மனிதனை தெய்வமாக்கும்
உழைப்பு இல்லறம் மகிழ்விக்கும்
உழைப்பு சமுதாயம் வளர்ச்சியாக்கும்
உழைப்பே!
உழைப்பு வழியில் நின்று
உலகை இரசித்துப் பயணிப்போம்
என்றுமே....!
Comments
Post a Comment