பனைமரம் | 52 | கவிதை
பல்வகை மரங்களில் ஒன்றும்
பல்வகை பயன்பாடு கொண்டதும்
பல்வகை மருத்துவ குணமுடையதும்
பல்லுயிர் வாழிடமாக உள்ளதும்
பனைமரமே!
தனிமரமாக இருப்பினும்
தனித்து உதவும் பண்பும்
முன்னோர் நட்டதனாலும்
தலைமுறைக்கு பயனை அளிப்பதும்
பனைமரமே!
கண்ணை உயர்த்தி பார்க்க வைப்பதும்
கனத்த வலிமை பெற்று நிற்பதும்
நீண்ட ஆயுட்காலம் கொண்டது - அதனை
தமிழகத்தின் சிறப்பு மரமும்
தென்னைபோல் உயர்ந்து நிற்பதும்
வறட்சியை தாங்கும் மரமும்
நீர்நிலையைக் காக்கும் மரமும்
பனைமரமே!
புறவெளியில் நிமிர்ந்து நிற்பதும்
புயலால் சாயாத வலிமையும்
இயற்கை வளத்தை காப்பதும்
சூறாவளிக் காற்றை தடுக்கும்
தமிழ்நாட்டின் அடையாள மரம்
காற்றின் மாசை கட்டுப்படுத்தும்
வயல் வரப்பில் காணப்படும்
ஆக்கிரப்பு தடுக்கும் மரமாகும்
அழகிய குளக்கரையில் இருப்பதும்
ஓடை ஓரத்தில் வளர்வதும்
ஓடும் ஆற்றின் கரையிலும்
கடற்கரை ஓரங்களில் காணப்படுவதும்
பனைமரமே!
பனைமரத்தின் ஓலையில் ஓலைச்சுவடியும்
ஓலையால் கூரையாக வேயவும்
பதனில் சத்துக்கள் நிறைந்தும்
ஓலையில் கலைப்பொருட் செய்வதும்
பனைமரத்தின் சிறப்பே!
உயர்ந்த பனைமரம் போல் எண்ணமும்
தெளிந்த பனைநீர் போல் சிந்தையும்
இனிக்கும் பனம்பழம் போல் சொல்லும்
உதவும் பனைமரம் போல் செயலிலும்
நின்று
வாழ்க்கையில் பயணிப்போமாக.....!
Comments
Post a Comment