சுதந்திர தின தியாகிகள் | 53 | கவிதை
நம்நாடு பேரரசர்கள் ஆண்டநாடு
நம்மண் தியாகிகள் வாழ்ந்தமண்
நம்வளம் இயற்கையின் பொக்கிஷம்
நம்நாடு போராடிப் பெற்ற சுதந்திரம்
தமிழுக்கு புத்துயிர் கொடுத்து நின்றவர்
தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்
மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்
பொய் சொல்வது பிடிக்காத மாமனிதர்
வறுமையிலும் தமிழ் பற்றை விடாதவர்
விடுதலைக்கு சிறைத் தண்டனை அனுபவித்தவர்
ஆங்கிலேயரை எழுத்தால் அடித்து நொறுக்கியவர்
ஆங்கிலேயரை எதிர்த்து முழக்கமிட்டு பரப்பியவர்
மகாகவி பாரதியார்
இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும்
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்
இந்திய சுதேசி இயக்கத்தில் பங்குகொண்டவரும்
துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்தவரும்
பாரதநாட்டை ஒரே குடையின் கிழ்கொண்டுவந்தவரும்
பலமுறை சிறைவாசம் சென்று வந்தவரும்
ஆங்கிலேயருக்கு எதிராக அறவழி போராட்டங்களில்
ஈடுப்பட்டவரும்
சர்தார் வல்லப்பாய் படேல்
விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவரும்
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும்
சத்தியாகிரகம் அறவழி போராட்டம் நடத்தியவரும்
விடுதலைப்பெற்ற இந்தியாவின் தந்தை என்பர்
மகாத்மா காந்தியடிகளையே !
சுதந்திர இந்தியாவிற்கு தன்னை அர்பணித்தவர்
மக்களின் நெஞ்சில் இன்றளவும் நீங்காதவர்
இந்தியாவின் புரட்சிநாயகன் என்று அழைக்கபட்டவர்
நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்!
பெருந்தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்
ஏழை மக்களுக்கு பொற்காலமாக திகழ்ந்தவர்
கல்விக்கண் திறந்த காமராசர் என்பர்
தென்னாட்டு காந்தி என்பர்
படிக்காத மேதை என்பர்
கர்மவீரர் காமராசரையே!
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
பெருமை மனதினில் கொண்டு மகிழ்வோம்
இந்திய சுதந்திர நன்னாளில்
இந்திய விடுதலை வீரர்களை
நினைவிற்க் கொள்வோம்
நல்வழியை பின்பற்றுவோம்
நம்வாழ்வு நேர்த்திப் பாதையில்
பயணித்து
மகிழ்ச்சிக் கொண்டு
எழுச்சி பெறுவோமாக என்றும்....!
Comments
Post a Comment