பெண்மை | 54 | கவிதை
பெண்மையின் பிறப்பு பொக்கிஷம்
பெண்மை உருவாக்கத்தின் பள்ளியறை
பெண்மை உயிரினத்தின் புகலிடம்
பெண்மை உயிரின் பாதுகாப்புமிடம்
குழந்தை உண்பது முதலிடம் தாய்மையிடம்
குழந்தை பேசுவது முதலிடம் தாய்மையிடம்
குந்தையின் அன்பின் முதலிடம் தாய்மையே
குழந்தையின் பார்வை முதலிடம் தாய்மையே
பெண்ணால் படைக்கப்பட்டது
இந்த சமூகயினம்
பெண்ணால் வடிவமைக்கபட்டது
இந்த மனிதயினம்
பெண்ணால் மகிழ்ச்சியாக்கப்பட்டது
இந்த இல்வாழ்க்கை
பெண்ணால் உறவாக்கப்பட்டது
இந்த பந்தபாசம்
பிறருக்காக வாழ்பவள் பெண்மையே
பலரின் வெற்றிக்கு பெண்மையே
பலசொந்த உறவுடன் வாழ்பவள்
பலசாதனைப் படைத்து நிற்பவள்
பெண்மையே!
பெண்கள் கல்வி கற்பது - என்றும்
குடும்பம் , சமுதாயம் பயன்தரும் என்பர்!
பெண்கள் ஒழுக்க வழியில் நிற்பது
பெண்மையே!
ஆழ்மனம் இன்ப மகிழ்ச்சிக்கும்
எண்ணம் தெளிவை பெறுவதற்கும்
செயல் ஊக்கம் கொடுப்பதற்கும்
பண்பு நல்வழியில் செல்வதற்கும்
பெண்மையே!
பெண்ணின் பண்பிற்கு கண்ணகியும்
பெண்புலமை சிறப்பிற்கு ஓளவையும்
வீரத்தின் மறுவடிவமாக ஜான்சி ராணியும்
சாதனையின் வீரத்திற்கு சாந்தி டிக்காவும்
பெண்மையின் சிறப்பிற்கே!
பெண்ணை தங்கமென்று அழைப்பதும்
பெண்ணை நதிபெயரில் அழைப்பதும்
பெண்ணை பூமாதேவி என்றழைப்பதும்
பெண்மையின் சிறப்பே!
இருமன உள்ளம் இன்பம் கொடுப்பதும்
இல்லறம் நல்வழி நடாத்தி செல்வதும்
மக்கட்பேறு மணம் கமழும் மலராகவும்
குடும்பம் கொடிமலராக படர்வதற்க்கும்
பெண்மையாலே!
பெண்ணின் உவமைநயமே
கவிஞனின் பெருமை
பெண்ணின் கலைநயமே
சிற்பியின் பெருமை
பெண்ணின் கலைவண்ணமே
ஓவியரின் பெருமை
பெண்ணின் பெருமையே
மண்ணின் பெருமை என்பர்...!
Comments
Post a Comment