தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621







                                                து டுப்பு   |  55  |  கவிதை  

   


 


இயற்கையின் துடுப்பு வான்மழை
உயிரினத்தின் துடுப்பு இயற்கைவளம்
உயிரின் துடுப்பு காற்று
வயிற்றின் துடுப்பு உணவு

குழந்தையின் துடுப்பு தொப்புள்கொடி
சிறுவனின் துடுப்பு தாய்மை
இளைஞனின் துடுப்பு கல்வியறிவு
மனிதனின் துடுப்பு வருவாய்
                                      என்பர்!
மணவாளியின் துடுப்பு இல்லறத்தான்
கணவனின் துடுப்பு மனையாள்
பெற்றோரின் துடுப்பு மக்கட்பேறு
முதியோரின் துடுப்பு ஆரோக்கியம்

உறவின் துடுப்பு பாசம்
நட்பின் துடுப்பு உதவி
அன்பின் துடுப்பு இரக்கம்
பண்பின் துடுப்பு மதிப்பு
                                என்பர்!
எண்ணத்தின் துடுப்பு சிந்தை
செயலின் துடுப்பு உண்மை
சொல்லின் துடுப்பு நேர்மை
வாழ்வின் துடுப்பு உழைப்பு

கனவின் துடுப்பு எழுச்சி
வளர்ச்சியின் துடுப்பு முயற்சி
சாதனையின் துடுப்பு இலக்கு                         

புகழின் துடுப்பு நற்பண்பு
                                    என்பர்!
மரத்தின் துடுப்பு நீர்தன்மை
கொடியின் துடுப்பு மரக்கொம்பு
தளிரின் துடுப்பு வேர்
கனியின் துடுப்பு கிளை

உருவாக்கத்தின் துடுப்பு இருமனம்
வளர்ப்பின் துடுப்பு பெற்றோர்
அறிவின் துடுப்பு ஆசிரியர்
அருளின் துடுப்பு இறைவன்
                                     என்பர் !
படகின் பயணம் துடுப்பாகும்
வாழ்க்கையின் பயணம் உழைப்பாகும்
கடமையின் பயணம் நேர்மையாகும்
ஒழுக்கத்தின் பயணம் நற்பண்பாகும்

உறவின் பயணம் நேசத்திற்கு
நட்பின் பயணம் உதவிக்கு
நல்லோர் பயணம் அன்பிற்கு
பெரியோர் பயணம் அறத்திற்கு
                                          என்பர்!

துடுப்பு வாழ்வின் வெற்றிக்கும்
       அறநெறியின் செயலுக்கும்
       அருளொளியின் பாதைக்கும்
                                        என்பர்!






                         கண்விழியில் நின்றவை       

       







            புதிதாக வைரக்குறள் என்ற நூல் வெளியிட்டுள்ளேன். கையடக்க நூல் 25 குறள் ஓவிய விளக்கம் பட விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் உள்ளது விலை 70/- ரூபாய்  இந்நூல் வாங்கி ஆதரவு அளித்து பயன்பெறவும். 

  
        தங்கள் முகவரியை வாட்ஸ்ஆப்பில் தெரிவித்தால் V.P.P மூலம்
 புத்தகம் அனுப்பிவைக்கப்படும். 
            வாட்ஸ்ஆப் நம்பர்- 9965661032










Comments