உறவு | 56 | கவிதை
பாசத்தில் மழைபோல் பேசுவர்
பக்தியில் பழம்போல் தெரிவர்
வார்த்தையில் தேன்போல் சிந்துவர்
செயலில் வானவில்லாக நடப்பர்
நெருங்கினால் நிறமாற்றமே!
மனமில்லா எண்ண உறவில்
பிரிவினையில் வாழ்ந்து இருப்பதும்
மனமில்லா சிந்தை செயலில்
மனமூழ்கி நினைத்து இருப்பதும்
வெற்று மனமே!
ஒருவர் மீது ஒருவர் அன்பின்மை
ஒருவர் மீது ஒருவர் புரிதலின்மை
மனதினில் பெருந்தன்மை இல்லாமை
வெற்று மனமே!
மகிழ்விப்பது மனிதகுணம்
மன்னிப்பது சான்றோரினம்
கொடுப்பது தெய்வகுணம்
கெடுப்பது தலைகணம்
பிரச்சனையில் விட்டு வாழ்வதற்கு
மனம் செம்மைப்பட வேண்டும்
குடும்ப உறவுகள் செம்மைப்படுவதற்கு
குடும்ப நல்லுறவுகள் வேண்டும்
அன்பு உள்ளமாகவும்
புரிதல் சிந்தையாகவும்
உறவின் இணைவிலும்
வாழும் வாழ்க்கை பயணம்
மகிழ்வு பாதையாகும்
நிறை வாழ்வாகுமே...!
கண்விழியில் நின்றவை
Comments
Post a Comment