மழை | 59 | கவிதை
வானம் இருள் சூழ்ந்து நீண்டுவது
மழைத்துளிச் சாரல் விடாது தொடர்வது
மனையில் நீரோடை சிரித்து செல்வது
மனையை தட்டிவிட்டு ஓடும் வெள்ளமாவது
பருவகாலத்தின் அடையாளமே!
மாந்தர் மனங்கள் சஞ்சலம் ஆவதும்
கடமையின் செயல் நின்று போவதும்
நீண்ட பயணம் தடையாக நிற்பதும்
நெருங்கிய உறவு உள்ளங்கள் பதற்றமாவதும்
காலத்தின் செயலே!
மழையின் விவேகமும்
காற்றின் உத்வேகமும்
கடலின் உக்கிரமும்
இயற்கையின் முகமே!
பலப்பல முகங்கள் மறைந்தும்
பலப்பல உருவங்கள் மாறியும்
மனிதனின் தலைகனம் மாறவில்லை
மனிதனின் அதீதபேராசை குறையவில்லை
இந்த பொக்கிஷ மண்ணிலே
இந்த அற்புத மனிதயிடமே
நினைக்காத அளவில் அழிவை சந்திப்பதும்
நினையாத செயல் இயற்கை காட்டுவதும்
தடுக்க முடியா இயற்கை சீற்றமாவதும்
இயற்கையின் நிதர்சன பயணம்
இயற்கையின் பயணத்திற்கு தடைநீக்கி
இயற்கையை வணங்கி நிற்போமாக...!
Comments
Post a Comment