காற்று | 60 | கவிதை
இனிய ஓசையை இரசிக்கச் செய்வதும்
இனிய பேச்சை கேட்கச் செய்வதும்
இதமான இராகமாய் தவழ்ந்து வருவதும்
இதமான இசையருள் ஒலிக்கச் செய்வதும்
காற்றே!
காற்றில்லாமல் உயிரினமில்லை
ஓசையுமில்லை
மெளனமாய் வீசும் காற்று
பூக்களை தலையாட்டி வைப்பதும்
மென்மையாய் வீசும் காற்று
பூக்களை சிரிக்க வைப்பதும்
வேகமாய் வீசும் காற்று
பூக்களை உதிர வைப்பதும்
அதிவேகமாய் வீசும் காற்று
பூசெடியை ஒடுத்திட வைப்பதும்
காற்றே!
இனிமையாக தெற்கில் வீசும்
தென்றல்காற்று
இனிமையாக வடக்கில் வீசும்
வாடைக்காற்று
மழையோடு காற்று வீசும்போது
: குளிர்காற்று
மழையோடு வேகமாக விசும்போது
புயல்காற்று
உயிரினங்கள் பூமியில் வாழ்வதும்
இயற்கை எழில் பசுமையாவதும்
கருமுகில் வானில் ஓடிவருதும்
மலரில் மகரந்த சேர்க்கையாவதும்
காற்றாலே!
மலரின் மணம் அறிவதும்
மலருக்கு சிறப்பைக் கொடுப்பதும்
மேடையை மணக்கச் செய்வதும்
அசுத்தம் காட்டச் செய்வதும்
காற்றாலே!
புல்லாங்குழல் இனிமைக்கும்
வீணையின் இரசிப்பிற்கும்
மத்தளம் பெருமைக்கும்
மேளமுழக்கம் இன்பத்திற்கும்
காற்றாலே!
காற்றை போல இனிமையான சொல்லும்
காற்றை போல உன்னத செயலும்
காற்றை போல வேற்றுமையில்லா எண்ணமும்
காற்றின் தன்மை போல பண்பும்
பெறுவோமாக!
காற்றின் உண்மை அறிவோம்
காற்றின் அசுத்தம் தடுப்போம்
சுற்றுச்சூழல் தூய்மைப் படுத்துவோம்
சுற்றும் பூமியை காப்போமாக ....!
கண்விழியில் நின்றவை
+
Comments
Post a Comment