கடமை | 62 | கவிதை
கதிரவன் கிழக்கே உதிப்பதும்
புவனம் நில்லாது சுற்றுவதும்
பூமியில் மழை பொழிவதும்
மழைநீர் நதியாக ஓடுவதும்
தன் கடமையே!
பொன்நிலா இரவில் ஒளிர்வதும்
மண்ணில் விதை துளிர்வதும்
மரத்தில் கனிகள் பழுப்பதும்
செடியில் பூக்கள் பூப்பதும்
தன் கடமையே!
உடலில் இதயம் துடிப்பதும்
நாளத்தில் குருதி ஓடுவதும்
இறைபை ஜீரணம் ஆவதும்
மனிதன் காற்றை சுவாசிப்பதும்
தன் கடமையே!
சொல்லின் மறுபக்கம் செயலாகும்
செயலின் மறுபக்கம் கடமையாகும்.
கடமையின் மறுபக்கம் அறிவாகும்
அறிவின் மறுபக்கம் அருளாகும்
குழந்தையின் கடமை விளையாட்டும்
சிறுவனின் கடமை கற்றலாகும்
இளைஞனின் கடமை புதுப்படைப்பாகும்
இல்லறத்தான் கடமை உழைப்பாகும்
தலைவியின் கடமை கணவனை கவனித்தல்
தலைவனின் கடமை மனைவியை மகிழ்வித்தல்
பெற்றோரின் கடமை மக்கட்பேரை வளர்த்தல்
ஆசிரியரின் கடமை நன்கு கற்பித்தல்
கடமையில் கண்ணும் கருத்தும் இருப்பின்
கவலையில்லா மனிதனாக வாழ்க்கை நடத்திடவும்
ஒழுக்கம் வழிபாதை சீர்மையாக இருப்பின்
செல்வம் இல்லத்தில் இருப்பாக தங்கிடவும்
கடமையே!
அறிவு விருத்தி அடையவும்
படிப்பின் கடமை தேவை
வேலையின் கடமை தேவை
இல்லறம் சிறப்புற்று நடப்பதற்கும்
திருமண கடமை தேவை
இல்லறம் பேர்சொல்லி இருப்பதற்கும்
மக்கட்பேறு கடமை தேவை
குழந்தை நல்முறை செல்வதற்கும்
வளர்ப்பு கடமை தேவை!
செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும்
உழைப்பின் கடமை தேவை!
நம்வாழ்வு நல்முறையில் கடப்பதற்கும்
மனத்தினில் தூய்மை கடமை தேவை
சிந்தைக்கு நல்லெண்ண கடமை தேவை
நன்னெறி இதயமாகவும்
நல்லெண்ண வழியிலும்
பாரில் நிலை பெற்று
பயணத்து மகிழ்வு பெறுவோமாக...!
கண்விழியில் நின்றவை
+
Comments
Post a Comment