குடியரசு | 70 | கவிதை
மன்னராட்சி அகற்றி மக்களாட்சியாகவும்
விடுதலை நாளாக கொண்டாடப்படுவதும்
மக்களாட்சி மலர்ந்த தினமாகவும்
குடிமக்களை ஒன்றியிணைக்கும் நாளாகவும்
குடியரசு தினமே!
வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசிட
மூவர்ணக்கொடி பறக்கவிட்டு பரவசப்படும் நாளே !
இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூருவது
வீரதீர சேவையருக்கு பாராட்டி மகிழ்விப்பது
குடியரசு தினமே!
தமிழுக்கு புத்துயிர் கொடுத்தவர்
தமிழ்த்தாயைப் போற்றி நின்றவர்
பன்முகத் திறமைக் கொண்டவர்
சமுதாய சீர்திருத்தவாதி என்றழைத்தவர்
எட்டியபுர மண்ணில் பிறந்தவர்
ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாதவர்
விடுதலைப் போராட்ட வீரரும்
விடுதலை உணர்வை ஊட்டியவரும்
மகாகவி பாரதியார்
ஆங்கிலேய அரசை அதிர வைத்தவர்
துடிப்பான இளம் வழக்கறிஞர் என்றனர்
தேச விடுதலைக்கு பெரும் பங்குகொண்டவர்
சுதேசி கப்பலின் வெற்றி நாயகர்
நாற்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்
ஆங்கிலேயரால் நாள்முழுக்க செக்கிழுத்து வாடினார்
ஆங்கிலேயரால் சணல் ஏந்திரம் சுற்றினார்
ஆங்கிலேயரால் சிறையில் கல்லுடைத்து துன்பப்பட்டவர்
பாரதியின் தேசிய பாடல்களை கேட்டபடி
இறுதி நிமிடத்தில் கண்களை மூடினார்
வ.ஊ.சிதம்பரனார்
தியாக உள்ளங்களை நினைப்போம்
சேவை வழிபாதையில் செல்வோம்
திருத்தமான பாதையில் நிற்போம்
சீர்மை செயலை படைப்போமாக....
மனிதன் கடமையில் ஒழுக்கம் தவறும்போது
தொழிலின் மதிப்பு குறைந்து போகுகிறது
தொழிலின் நேர்த்தி கோணல் ஆகுகிறது
தொழிலின் சீர்மை குலைந்து நிற்கிறது
நிதர்சனமே!
மனிதன் நம்பிக்கை எண்ணம் குறையும்போது
முயற்சியின் நற்பலன் கிடைக்காது போகிறது
முயற்சியின் மனஈர்ப்பு குறைந்து போகிறது
முயற்சியின் வெற்றி பாதை இருளாகிறது
நிதர்சனமே!
மனிதனின் இலக்கு சிந்தனை இல்லாதபோது
துடுப்புயில்லா தோணி போல ஆகிறது
வாலில்லா பட்டம் போல ஆகிறது
இரசமில்லா கண்ணாடி போல ஆகிறது
நிதர்சனமே!
மனிதனின் அறச்செயல் ஈடுபாடு இல்லாதபோது
முதியோர் சேவை இல்லம் இல்லாதாகிறது
அனாதையோர் தங்கும் விகுதி இல்லாதாகிறது
அறவிழா நடப்பது நின்று போகுகிறது
நிதர்சனமே !
மனிதனின் உடல் ஆரோக்கியம் குறையும்போது
சொல்லின் அழகு காற்றில் கலக்கிறது
செயலின் திறமை மறைந்து போகுகிறது
பழக்கத்தின் நட்புமுறை குறைந்து நிற்கிறது
நிதர்சனமே!
ஆரோக்கியமாக உடலை காத்து
கடமையில் நேர்வில் நின்று
முயற்சியில் திண்ணமாக இருந்து
அறச்செயல் பாதையில் பயணத்து
மகிழ்வு வாழ்வு பெறுவோமாக....!
Comments
Post a Comment