வாகை | 77 | கவிதை
வெற்றி வாகை சூடிட
வெற்றி பயணமாக அமைந்திட
வாழ்க்கை செம்மையாக மாற்றிட
வாழ்க்கையில் மகிழ்வு பெற்றிட
இலக்கு வேண்டுமே!
லட்சியம் இல்லாத வாழ்க்கை
துடுப்பு இல்லாத படகினையானது
இலக்கு இல்லாத பாதை
ஒளிச்சுடர் இல்லாத பாதையானது
உழைப்பு இல்லாத உடலானது
பாழ்லடைந்த மண்சுவர் போன்றது
நம்பிக்கை இல்லாத செயல்
பார்வையற்ற இருகண் போன்றது
வாழ்வில் பொறுமை கடைப்பிடிப்பதும்
வாழ்வில் துணிவை வளர்ப்பதும்
வாழ்வில் இடைவிடா முயற்சிப்பதும்
வாழ்வு நேர்த்தியில் செல்வதும்
முன்னேற்றமே!
குழந்தை வாகை சூடிட - என்றும்
தாய், தந்தையின் உதவி வேண்டுமே!
சிறுவன் வாகை சூடிட- என்றும்
ஆசிரியரின் கற்பித்தல் வழி தேவையே!
இளைஞன் வாகை சூடிட - என்றும்
இலட்சியம் செயலில் முழுமையாக இருப்பதே!
இல்லறத்தான் வாகை சூடிட - என்றும்
உழைப்பில் முழுமை ஈடுபாடு இருப்பதே!
இல்லாள் வாகை சூடிட - என்றும்
இல்லத்தில் சிக்கன வழிமுறை பின்பற்றுவதே!
சேவையில் வாகை சூடிட - என்றும்
பொதுநலம் மனதினில் நிறைந்து இருப்பதே!
பெரியோர் வாகை சூடிட - என்றும்
சான்றோர் வாகை சூடிட - என்றும்
அனுபவம் அறிந்து செயல் படுவதே!
பொறுமைக்கு சைனீஸ் மூங்கில்மரம் போலவும்
உழைப்பில் தேன்பருகும் தேனீக்கள் போலவும்
நேர்மையில் துலாம் முள்ளை போலவும்
துணிவில் நிலவில் கால்பதித்த ஆம்ஸ்ராகவும்
இருப்பின்!
வாழ்வில் வாகை சூடிடலாம்
வெற்றி மகிழ்வு பெறலாம்
வாழ்வின் பயணம் இனித்திடும்
வையகம் போற்றும் மனிதனாகலாம்
மனிதருள் மாணிக்கமாகலாம்
மாந்தரின் பயணத்தில்
வெற்றி வாகை சூடிடலாம்....!
Comments
Post a Comment