உணவு | 78 | கவிதை
உணவே மருந்து என்பர்
உணவையே அன்னம் என்பர்
உணவே அமுதம் என்பர்
உணவே இயற்கை என்பர்
உணவு நாம் பரிமாறுவதிலும்
உணவு நாம் சமைப்பதிலும்
உணவு நாம் உண்பதிலும்
ஆசாரம் இருப்பது சிறப்பே!
தோஷம் பலவகை என்பர்
உணவு தோஷம் உயிருக்கு
சிறப்பே!
நாம் நேர்மையற்ற வழியில் சம்பாதிப்பில்
நாம் வாங்கும் உணவு பொருளால்
நாம் பிறருக்கு உணவு கொடுப்பதால்
உண்பவர் ' அர்த்த தோஷம்' அடைவரே!
நேர்மையற்ற வழியில் செல்வானே!
நாம் உண்ணும் உணவு அசுத்தமாகவும்
தீயவன் சமைத்த உணவு குற்றமானதும்.
தூசி, தலைமுடி தீண்டபட்ட உணவாலும்
உண்பவர் ' நிமித்த தோஷம்' அடைவரே!
தீயவன் அமைத்த உணவால்
தீமை எண்ணம் உண்டாகுமே!
நாம் தேவையற்ற பிரச்சனை இடத்திலும்
நாம் தேவையற்ற அற்ப அசுத்தமிடத்திலும்
தூர்நாற்றம் சூழ்ந்த அருகே உண்பதாலும்
உண்பர்' ஸ்தான தோஷம்' அடைவரே!
அன்பு நிறைந்த இடத்தில்
உள்ளன்பு நிறைந்த குணமாகுமே !
சமைக்கும் உணவுப் பொருட்கள்
சாத்வீக குணமுடையதாக இருப்பதும்
ராஜஸிகமான குணமுடையதாக இருப்பதும்
தாமஸிகமான உணவை தவிர்ப்பதும்
சிறப்பே!
சாத்வீக உணவு ஆன்மிகத்தை தருவதும்
ராஜஸிகமான உணவு உணர்வை தூண்டுவதும்
தாமஸிகமான உணவு தீயவை வளர்க்கும்
' குணதோஷம் ' என்பர்
நாம் பழைய உணவை உண்பதும்
நாம் அதிகவருத்திய உணவை உண்பதும்
நம் உடம்புக்கு ஊறு விளைக்கும்
உண்பவர்' சம்ஸ்கார தோஷம்' அடைவரே!
உண்ணும் உணவு - என்றும்
அன்னை அமைத்த உணவாகவும்
இல்லாள் சமைத்த உணவாகவும்
இல்லத்தில் சமைத்த உணவாகவும்
ஏற்பது சிறப்பே!
சான்றோர் சொன்ன சிறந்த வழியில்
சலியாது வாழ்வு பயணத்தில் பயணிப்போமாக....!
Comments
Post a Comment