இல்லறம் [ 79 ] கவிதை
மாந்தரின் இல்லறம் பலவிதம்
மாந்தர் அமைவிடம் பலயிடம்
மனதின் நிறைவு பொருத்தும்
மடியில் பொருள் நிறைபொருத்தும்
இல்லறம் நேர்த்தி இருக்குமிடம்
இல்லறம் உண்மை பேசுமிடம்
இல்லறம் உறவு மகிழுமிடம்
இல்லறம் மனநட்பு கொள்ளுமிடம்
வறுமையில் வாழும் புகழிடம்
நடுமையில் வாழும் மனிதயிடம்
உயர்வில் வாழும் மாளிகையிடம்
உண்மையில் வாழும் தெய்வயிடம்
அன்பு தவழும் பூந்தோட்டமாகவும்
அரவணைப்பு பின்னிய கொடியாகவும்
ஆனந்தம் கொள்ளும் மழையாகவும
அறம் நிறைந்த நன்னெறியாகவும்
இருப்பது இல்லறமே!
புதர் சுற்றிய இடத்திலும்
சேறு நீரோடை ஓடுமிடத்திலும்
பூமலர் உதிர்ந்து கமழுமிடத்திலும்
பூந்தளிர் நிழல் தருமிடத்திலும்
மாந்தர் இல்லறமே!
எண்ணத்தின் மகிழ்வு
மனதின் சந்தோஷம்
பணியின் அமைப்பும்
செயலின் தன்மையும்
மாந்தரின் இல்லற அமைவிடமே !
நற்பெயர் தரும் இல்லறத்தில்
நற்பெயர் பயணத்தில் பயணித்து
மகிழ்வோமாக...!
Comments
Post a Comment