தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

மாற்றம் [ 81 ] கவிதை

                                                  மாற்றம்  [ 81 ] கவிதை 

       




மாற்றம் பலவகை என்பர்
இயற்கை பொக்கிஷ மாற்றம்
மண் காலத்தின் மாற்றம்
வானம் பருவ மாற்றம்
பசுமை சூழலின் மாற்றம்
மாந்தர் எண்ணத்தின் மாற்றம்
பழக்கம் செயலின் மாற்றம்
                                          என்பர்!
மாற்றம் வாழ்க்கையின் பயணமாகும்
மாற்றம் இயற்கையின் செயலாகும்
மாற்றம் வளர்ச்சியின் படியாகும்
மாற்றம் புதுபாதையின் அமைப்பாகும்
 
இல்லறத்தின் மாற்றம் முயற்சி
குடும்பத்தின் மாற்றம் எழுச்சி
குழந்தையின் மாற்றம் மகிழ்ச்சி
கல்வியின் மாற்றம் பயிற்சி

வேலையின் மாற்றம் உயர்வும்
ஊதியத்தின் மாற்றம் அனுபவம்
உணவின் மாற்றம் சுவையும்
ஆரோக்கியத்தின் மாற்றம் வயதும்

மாற்றம் இல்லா இயற்கையுமில்லை
மாற்றம் இல்லா உயினமில்லை
மாற்றம் இல்லா சமுதாயமில்லை
மாற்றம் இல்லா ஆட்சியுமில்லை

மாற்றத்தில் உருவானது இவ்வுலகம்
மாற்றத்தில் பிறந்தது மனிதயினம்
மாற்றத்தில் தோன்றியது விஞ்ஞானம்
மாற்றத்தில் படைத்தது புதுயுகம்

சிறப்பான மாற்றத்தின் வழியிலும்
உயர்வான மாற்றத்தின் படியிலும்
மதிப்பான மாற்றத்தின் பண்பிலும்
முத்தான மாற்றத்தின் முன்னோர் வழியிலும்
                                          சான்றோர் வழியிலும்
                                          பயணித்து என்றும்
நிறைவான பயணத்தின் தலைமை வழியிலும்
                                         பயணிப்போமாக....!
        
   

        

 


 



                 

                     !

Comments