தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

பள்ளி [ 82 ] கவிதை

                                                பள்ளி  [ 82]  கவிதை   






                                         

 

+








தென்னஞ்சோலை சூழ்ந்த பசுமையிடத்தில்
தென்றல் இன்பமாக வீசுமிடத்தில்
பூக்கள் பூரித்துக் கொட்டுமிடத்தில்
பூந்தளிர் மின்னி இசைப்பாடுமிடத்தில்

பூங்குயில் இனியராகம் கேட்குமிடத்தில்
அழகுமயில் தோகை விரித்தாடுமிடத்தில்
குளுமை தளிர்நிழல் கொடுக்குமிடத்தில்
தறிநெய்தல் ஒலியைக் கேட்குமிடத்தில்
                                   அமைந்த வதம்பை கலைக்கூடமே!
முன்னோர் கல்வி அறம் செய்ததும்
சான்றோர் கல்விச் சுடர் ஏற்றியதும்
மாந்தருக்கு அறிவொளி பாதை அமைத்ததும்
மாந்தர் வாழ்விற்கு மலர்ச்சி கொடுத்ததும்
                                      இந்தக் கல்விக்கூடமே!
இளந்தளிர் புதுமை படைத்து மகிழ்ந்ததும்
இளநெஞ்சம் விளையாடி சாதனை நிகழ்த்தியதும்
இலக்கியம் கற்று மதிக்கச் செய்ததும்
அழகிய கலைக் கற்று மகிழ்ந்ததும்
                                       இந்தக் கல்விக்கூடமே !
ஐந்து தலைமுறைக்கு கல்விச் சுடராகவும்
ஐம்பெரும் பண்புக்கு வழிக் காட்டியதும்
நற்பண்பு வாழ்வுக்கு அறிவுரை சொல்லியதும்
நன்னெறி பாதைக்கு துணை நின்றதும்
                                   இந்தக் கலைக்கூடமே!
ஆயிரம் கல்வி பூக்கள் மலர்ந்ததும்
ஆயிரம் அறிவுக் கண் திறந்ததும்
ஆயிரம் சிந்தைக்கு கல்வி புகட்டியதும்
ஆயிரம் கால்சுவடு பதிந்த இடமும்
                             இந்தக் கல்விக்கூடமே!
கல்விமான்களாக செதுக்கியதும்
அறிஞர்களாக மலர்ந்ததும்
மருத்துவராக உருவானதும்
ஆட்சியாளராக உயர்ந்ததும்
                       நற்மதிப்பு அளித்ததும்
                       நல்வாழ்வு கொடுத்ததும்
                       இந்தக் கல்விச்சோலையே !
கல்வியெனும் பூந்தோட்டத்தில் மிளிர்ந்த,
முன்னாள் மாணக்கர் முத்துமுகங்கள்
கல்வியெனும் பள்ளியறையில் மணங்கமழ்ந்த,
முன்னாள் மாணக்கர் பவளமுகங்கள்

சந்திப்பில் கூடிய நினைவு முகங்கள்
சிந்தையில் பதிந்த பழக்க உள்ளங்கள்
நட்பில் மலர்ந்த தோழமை உறவுகள்
பருவத்தில் பார்த்த பழைய நினைவுமுகங்கள்

உங்கள் இதய சந்திப்புகள் - என்றும்
சமூக செயல்பாடாக உன்னதாகட்டும்
உங்கள் முத்தான நட்பால் - என்றும்
அறநெறி வழியில் சிறக்கட்டும் !

நல்லோர் காட்டிய பாதையில்
நற்மதிப்பு பெற்று உயரட்டும்
முன்னாள் மாணக்கர் நட்பு பயணம்
முல்லைமலர் சரமாக தொடுத்து
                       மணங்கமழ்ந்து
                       மாந்தர் பயன்பெற்று மகிழட்டும்
                                         என்றுமே .....!
















Comments