தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தைத்திருநாள் [ 83 ] கவிதை

                                   தைத்திருநாள்  [ 83 ] கவிதை

                        






தைத்திங்கள் வாசலில் ஓடிவர
தைமகள் கோலத்தில் நின்றிட
தைநாளில் கதிரவன் ஒளியூட்டிட
தைநாளில் பனிப்பூக்கள் வணங்கிடும்
                                              தைத்திருநாளே !
தைமகள் பனியால் நனைந்திட
தைமகள் கதிரால் மின்னிட
தைமகள் இல்லத்தில் அமர்ந்திட
தைமகள் அருளொளி கொடுத்திடும்
                                  தைத்திருநாளே !
குங்கும மங்களம் தந்து
சந்தன மணம் வீசி
நறுமண தூபம் பரவி
நச்சுக்கள் விலகி ஓடிடும்
                     தைத்திருநாளே!
இயற்கைையை வணங்கி நிற்பதும்
உழவை போற்றி பாடுவதும்
உழவனின் மனது மகிழ்வதும்
உழுதும் உயினத்தை மகிழ்விப்பதும்.
         தமிழர் மகிழ்ந்து கொண்டாடுவதும்
         தமிழர் இன்னிசையொலி கொட்டுவதும்
         தமிழர் திருநாள் தைத்திருநாளே !
மனதில் கலக்கங்கள் நீங்கி
உள்ளத்தில் எழுச்சி பொங்கி
உறவில் நட்பு பெருக்கி
உண்மையில் நின்று மகிழ்வோமாக...
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!











இனிய காலைபொழுது வேளையில்
இனிய குயிலோசை ஒலிப்பதும்
இன்ப குளிர்பனி பொழிவதும்
இனிய இசையருள் இன்னிசையும்
                  கேட்பது மார்கழி மாதமே !
வீதியில் பனிப்பொழிவு திரையாகவும்
வாசலில் வண்ணக் கோலமும்
பூவிதழ் பனியில் நடுங்குவதும்
பூஞ்சோலை குளிர்ந்த இடமாவதும்
                               மார்கழி மாதமே !
இல்லத்தில் அருளொளி காண்பதும்
கோவிலில் மணியோசை கேட்பதும்
மங்கையர் மகிழ்வில் திளைவதும்
மதிமுகம் இல்லத்தில் பார்ப்பதும்
                                    மார்கழி மாதமே !
இயற்கை பனிப்போர்வையால் தழுவதும்
ஆதவன் ஒளிக்கதிர் சுகமாவதும்
மண்மகள் பனியால் நனைவதும்
மாந்தர் உடைமை தூய்மையாக்குவதும்
                                   மார்கழி மாதமே !
இறைவனை துதிப்பதும்
இறையருள் பெறுவதும்
இல்லறம் தூய்மையும்
இருளொளி நீங்குவதும்
                      மார்கழி மாதமே !
இறைவொளி பாதையில் நின்று
இனிமை வாழ்வை பெற்று
                         மகிழ்வோமாக...!
















Comments