கோவில்(86)கவிதை
அறிவுக் கலைக்கூடம் அமைந்த வதம்பையில்
அருகில் தெய்வ கோபுரம் அருளுமிடம்
தெய்வ மந்திரம் ஓதுவதை கேட்குமிடம்
தெய்வ மணியோசை தவழ்ந்து வருமிடம்
இனிதான தென்றல் வீசுமிடத்தில்
அழகிய பூமரங்கள் நிறையிடத்தில்
வண்ண ஆடையை நெய்யுமிடத்தில
வண்ண மயிலோசை கேட்குமிடத்தில்
நெல்லுகுப்பம்மன் கோவிலே!
வானுயர்ந்து நிற்கும் கோபுரம்
வண்ணநயம் கண்ணை ஈர்ப்பதும்
கைவினை கலைநயம் பேசுவதும்
கண்ணை வியக்க வைப்பதும்
கலைமகள் கலையை அருளுவதும்
தெய்வமகள் செல்வம் கொடுப்பதும்
வீரமகள் ஆற்றல் அளிப்பதும்
பூமகள் நறுமணம் கமழ்வதும்
நெல்லுகும்மன் கோவிலே!
கலசம் தெய்வத்தன்மை பெறவும்
சிலைகள் தெய்வீகத்தன்மை புதுப்பிப்பதும்
மாந்தர் தெய்வருள் பெறுவதும்
மகா அஷ்டமந்தன கும்பாபிஷேகமே !
கோபுரம் போல உயர்ந்த எண்ணமும்
கலசம் போல உள்ளம் பாவித்தும்
கலைநயம் போல வாழ்க்கை பெற்றும்
சிலைநயம் போல மதிப்பு அடைந்தும்
நெல்லுகுப்பம்மன் அருள் பெற்று
நீணெறி பயணித்து வணங்குவோமாக...!
ReplyForward |
Comments
Post a Comment