தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

செல்வம் [87] கவிதை

                                               செல்வம்  [87] கவிதை 

         


வீட்டிற்கு செல்வம் பசுவும்
தோட்டத்திற்கு செல்வம் முருங்கையும்
குடும்பத்திற்கு செல்வம் மக்கட்பேறும்
மனமகிழ்விற்கு செல்வம் உழைப்பும்
                                              என்பர்!
உடல் ஆரோக்கியம் கொடுப்பதும்
எலும்பு வளர்ச்சிக்கு துணையாவதும்
கண்ணின் பார்வையை சீராக்குவதும்
உடலின் வனப்புக்கு துணைபுரிவதும்
           வீட்டில் ஆரோக்கியம் வழங்குவதும்
           கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதும்
           கிருமிநாசினியை நீக்கி பாதுகாப்பதும்
           தெய்வீகம் சத்துப் பொருளாவதும்.
                                             பசுவின் பயன்பாடே !
வம்ச விருத்திற்கு உபயோகப்படுவதும்
ரத்த அழுத்தத்தை சீராக்குவதும்
கண்கள் ஒளியூட்டும் சத்தாகவும்
கண்பார்வை குறைபாடு அகலுவதும்
                         முருங்கையின் பயன்பாடே!
குடும்ப மகிழ்ச்சி கொடுப்பதும்
குடும்ப ஒளிவிளக்கு சுடராகவும்
வம்சவழி பேர் சொல்லும் செல்வமாகவும்
வாழ்வில் உறுதுணைக்கு துணையாவதும்
                                          குழந்தை செல்வமே!
இல்லறம் செழுமை பொங்கிடவும்
உள்ளம் திருப்தி அடைந்திடவும்
அறநெறி செயல் நடந்திடவும்
அரவணைப்பு கொடியாய் படர்ந்திடவும்
                                 உழைப்பு செல்வமே!
மனிதனை மதிக்கச் செய்வதும்
மனிதனை உயர்வை பெற்றிடவும்
மாந்தர் சொல்லை மேம்படவும்
மாந்தர் செயலை சீர்பெறவும்
                        அடக்கம் செல்வமே!
இயற்கை செல்வம் பெற்றும்
வளர்ப்பு செல்வம் காத்தும்
பெற்ற செல்வம் பேணியும்
அடக்க செல்வம் வளர்த்தும்
உழைப்பு செல்வம் பிடித்தும்
                வாழ்வில் சிறப்புப் பெற்று
                வாழ்வில் மகிழ்வு பெறுவோமாக ....!










Comments