குரங்கு [88] கவிதை
கடவுளின் அற்புத படைப்பும்
இயற்கையின் மனித அமைப்பும்
செயல் மனிதனின் சாரலும்
பார்வை மனிதனின் சாயலும்
குரங்கு இனமே !
மனதை இரசிக்கச் செய்வதும்
கண்ணை உருட்டச் செய்வதும்
மனதை பதற்றம் உண்டாக்குவதும்
மாந்தர் விரட்டி விடுவதும்
குரங்கு கூட்டத்தையே!
சேட்டை செய்து தாவூவதும்
குட்டியை அரவணைத்து பாதுகாப்பதும்
உடைமை கையால் சொரிவதும்
கண்ணை உற்று நோக்குவதும்
குரங்கு குணமே!
அன்பைச் சொல்வதும்
புத்தியைக் காட்டுவதும்
மனதின் தன்மையும்
செயலின் செய்கையும்
குரங்கு காட்டுவதே!
குரங்கின் அச்சில் வந்தவன்
குரங்கின் செயலை செய்பவன்
குரங்கின் மனதை பெற்றவன்
குரங்கின் உடைமை உடையவன்
மனித இனவழியே!
அன்பில் அரவணைப்பும்
உள்ளத்தில் கட்டுப்பாடும்
மதிப்பில் உயர்விலும்
மதிப்பை பெற்று
வாழ்வில் பயணிப்போமாக...!
Comments
Post a Comment