சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் [ 90 ] கவிதை
மலர் மொட்டுகள் விளையாடுமிடம்
மலர்கள் குவியும் ஒற்றுமையிடம்
மென்மை பூக்கள் கற்குமிடம்
மலர்கள் தொடுத்து பூமாலையாகுமிடம்
கல்விச் சோலையிலே!
அறிவுக்கு வித்தாகவும்
பாதைக்கு துணையாகவும்
வாழ்க்கைக்கு ஊன்றுகோலாகவும்
உயர்விற்கு படியாகவும்
இருப்பது ஆசிரியர்களே!
வித்திற்கு நீராக விளங்கியதும்
துணைக்கு ஆதரவாக நின்றதும்
ஊன்றுகோலுக்கு நம்பிக்கை ஊட்டியதும்
மதிப்பிற்கு பண்பை சொன்னதும்
ஆசிரியர்களே!
ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்ததும்
அடக்கத்தை சொல்லி தந்ததும்
அறிவை கூர்மை படுத்தியதும்
வாழ்வில் ஒளிச்சுடர் ஏற்றியதும்
ஆசிரிய பெருமக்களே!
சமுதாயம் சீர்மை படுத்தியதும்
சமுதாயம் விழிக்கச் செய்ததும்
தீமையை சுட்டிக் காட்டியதும்
நல்லதை எடுத்துக் கூறியதும்
ஆசிரியர்களே!
வழிக்காட்டிய ஆசிரிய பெருமக்களை
பெருமைக் கொண்டு
பெருமகிழ்வு கொள்வோம்
ReplyForward |
Comments
Post a Comment