தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

விண்கலம் சந்திராயன் [ 91 ] கவிதை

                   

                                     விண்கலம் சந்திராயன்  [ 91 ] கவிதை 

                             

  

      
பூமியில் ஓடுவது தெய்வ அருள்தேரோட்டம்
சந்திரனில் ஓடுவது அறிவின் விண்தேரோட்டம்
கலைஞனின் கையால் செதுக்கியது மரத்தேர்
அறிஞரின் சிந்தையால் உருவானது அறிவுத்தேர்
         அறிவின் தேர் தேன்நிலவு மண்ணிலும்
         அறிவின் அழகிய அற்புதத் தேரோட்டம்
         அறிவின் கண்ணை திறக்கச் செய்ததும்
         ஆற்றலின் தன்மை வெளிப்பாடு ஆனதும்
                                                        விண்கலத்தேர்
சந்திர மண்ணில் கால்பதித்து  ஓடுவதும்
சந்திரனில் இந்திய சின்னம் பதித்ததும்
அதிநவீன தொழிற்நுட்ப அறிவின் சுடரும்
அறிஞர் வடிவால் அமைந்த விண்ணின்
                                   அற்புதத் தேரோட்டம்
ஆயிரம் கண்கள் பார்த்து அமைத்தது
ஆயிரம் விஞ்ஞான கண்ணில் பதிவானது
ஆயிரம் கரங்கள் பட்டு உருவானது
ஆயிரம் அங்கங்கள் இணைத்து வடிவமானது
                                                   விண்கலத்தேர்
காலத்தின் ஓட்டத்தில் நிலைநிறுத்த உருவானதும்
கலைநயம் மிக்க அறிவு ஆற்றலாலும்
காலத்தின் இடைவிடா நம்பிக்கை முயற்சியாலும்
காலத்தின் புதுமை படைப்பு திறத்தாலும்
                                    உருவானது விண்கலத்தேர்
பெருமையை நிலை நிறுத்தச் செய்தது
மகிழ்ச்சி பூக்கள் கொட்டியது விண்தேர்
மாந்தர் நெஞ்சில் பதிய வைத்தது
மாந்தர் அறிவின் உயர்வை வெளிபாடானது
                             இந்திய விண்கலத்தேர்
                                  சந்திரயான் - 3
அறிவின் பயணம்
மகிழ்வின் பயணமே...!
                                                 

                                               




                     
                                                          
 பூமியில் ஓடுவது தெய்வ அருள்தேரோட்டம்
சந்திரனில் ஓடுவது அறிவின் விண்தேரோட்டம்
கலைஞனின் கையால் செதுக்கியது மரத்தேர்
அறிஞரின் சிந்தையால் உருவானது அறிவுத்தேர்
      அறிவின் கண்ணை திறக்கச் செய்ததும்
      ஆற்றலின் தன்மை வெளிப்பாடு ஆனதும்
       சந்திர மண்ணில் கால்பதித்து  ஓடுவதும்
       சந்திரனில் இந்திய சின்னம் பதித்ததும்
                                                        விண்கலதேர்
ஆயிரம் கண்கள் பார்த்து அமைத்தது
ஆயிரம் விஞ்ஞான கண்ணில் பதிவானது
ஆயிரம் கரங்கள் பட்டு உருவானது
ஆயிரம் அங்கங்கள் இணைத்து வடிவமானது
                                                   விண்கலத்தேர
காலத்தின் இடைவிடா நம்பிக்கை முயற்சியாலும்
காலத்தின் புதுமை படைப்பு திறத்தாலும்
பெருமையை நிலை நிறுத்தச் செய்தது
மாந்தர் நெஞ்சில் பதிய வைத்தது
                            இந்திய விண்கலத்தேர்
                                  சந்திரயான் - 3           
                              

                                                 
                           
                         


              

Comments