தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

காலம் [ 93 ] கவிதை

                                                            காலம்     [ 93 ]  கவிதை

                   



காலம் ஓடும் வாழ்க்கை பாதையில்
கள்ளமனம் நிறைந்து வாழும் கூட்டத்தில்
வஞ்சமனம் கொண்டு திரியும் பூமியில்
பொய்மனம் வண்ணம் பூசி மிளிர்வதும்
                                         மாந்தர் சிலரே!
மெய்மை கிள்ளி பொய்மை தூவியும்
பேராசை நிரப்பி அறநெறி மகனாகவும்
மாந்தரின் அறிவை மழுங்கச் செய்வதும்
மாந்தரை அடிமைப் படுத்தி மகிழ்வதும்
                                           மாந்தர் சிலரே!
பூமியை நான் படைத்தேன்
வானத்தை நான் விரித்தேன்
நதியை நான் உருவாக்கினேன்
பசுமை நான் படைத்தேன்
                 என்பர் மாந்தர் சிலரே!
பொய்மை மூட்டை மனதில் நிரப்பி
பொருள் மூட்டை இல்லத்தில் நிரப்பி
மண்ணை தோண்டி பொருள் ஆக்கி
நிலத்தை வளைத்து தன்வசம் மாற்றி
                          நிற்கும் மாந்தர் சிலரே!
பொருளாசை வீட்டில் நிரம்பி வழிந்தாலும்
பதவியாசை உடைமை காய்ந்த செருகானாலும்
வஞ்சக குணம் பழுத்த உடலானாலும்
இருள் பண்பு இறுதிவரை என்றும்
                        மாறுபடுவதில்லையே!
ஆழ்மன முள்நிறைந்த.
                 விஷம் கலந்த
                 இருள் மனதிலேயே !
நேர்த்தி வழியில்
அறநெறி பாதையில் பயணிப்போமாக...!






















 

Comments