கார்த்திகை [ 96 ] கவிதை
தீபங்கள் ஒளி பூரிப்பதும்
தீபங்கள் ஒளிக்கதிர் சிமிட்டுவதும்
தீபவொளி மென்மையாக அசைவதும்
தீபவொளி ஜோதியாக மிளிர்வதும்
கார்த்திகை தீபமே!
வாசலில் தீபவொளி வணங்குவதும்
மாடத்தில் தீபவொளி குறுநகைப்பதும்
இல்லத்தில் தீபவொளி பிரகாசிப்பதும்
இறைவன் பீடத்தில் அருளிப்பதும்
கார்த்திகை தீபமே!
ஆலயங்களில் தெய்வச் சுடராகவும்
உள்ளங்களில் ஒளிச் சுடராகவும்
இல்லத்தரசியின் முகச் சுடராகவும்
உவகையின் மனச் சுடராகவும்
கார்த்திகை தீபமே!
மாந்தர் உள்ளம் இருள் போக்குவதும்
மாந்தர் உடமை தூய்மை ஆக்குவதும்
மாந்தர் இருப்பிடம் கலைநயம் ஆவதும்
மாந்தர் கண்ணில் விண்மீன் தவழ்வதும்
கார்த்திகை தீபமே!
கார்த்திகை தீபவொளி போல
காரீருள் இல்லா இதயமாக
கடாட்சம் ஒளியை பெற்று
கலைநய அருள் பெறுவோமாக... !
Comments
Post a Comment