தைத்திருநாள் [ 97] கவிதை
பொன்நிற பூக்கள் பூமாலையாவதும்
வெள்ளிநிற பூக்கள் பூச்சரமாவதும்
நீலநிற பூக்கள் வண்ணச்சரமாவதும்
பசுமைநிற பூக்கள் பூங்கொத்தாவதும்
தைத்திருநாளின் மதிப்பே!
தைமகள் இல்லத்தில் வந்து அமர்வதும்
தைநாள் இல்லத்தில் தூய்மை ஆவதும்
மங்கள கலைநயமாக இல்லம் மாறுவதும்
மங்கள அழகிய தீபவொளி ஏற்றுவதும்
மண்மகளை தொட்டு வணங்கும் நாள்
ஆதவனை வணங்கி நிற்கும் நாள்
உழவை நேசித்து பார்க்கும் நாள்
உழவுத் தொழிலை வழிபடும் நாள்
தைத்திருநாளே !
உழவர் மனமகிழ்வு கொள்வதும்
உழவர் நெல்மணியை குவிப்பதும்
இனிக்கும் பொங்கல் படைப்பதும்
இன்முகமாக குடும்பம் மகிழ்வதும்
உள்ளங்கள் தூய்மை பெறுவதும்
சிந்தனை உயர்வு நினைப்பதும்
நட்பில் இணைவு ஏற்படுவதும்
உறவில் அன்பு திளைவதும்
தைத்திருநாளே!
சொல்லில் இனிக்கும் செங்கரும்பாகவும்
நடத்தையில் நேர்வு வழியாகவும்
பண்பில் நல்லவை பதிப்பாகவும்
மனதில் அருளொளி நிறைவாகவும்
பயணித்து மகிழ்வோமாக..!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment