தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

திருமணம் -2024

 

                                                           திருமணம் -2024                                               



வாழ்க்கை  எனும் அற்புதப் பூவுலகில்
வாழ்க்கை தொடரும் மங்கள மணமேடை
வாழ்வு பூங்கொடியாகத் தொடரும் நாளே
வாழ்வு புதியபாதைக் காட்டும் நாளே
                                          திருமணமே !
பூந்தென்றல் வீசும் நன்னாள்
புன்னகை முகமாகத் திளைவதும்
பூமணம்  கமழும் திருநாள்
பூவிழி குளிரும் திருநாள்
                                திருமணமே!
பூந்தோரணம் வண்ணமாக ஈர்ப்பதும்
பூக்கள் வாழ்த்துக் கூறுவதும்
மங்கள குங்குமம் அழைப்பதும்
மாந்தளிர் வணங்கி வரவேற்பதும்
                                     திருமண நாளே!
உறவுகள் வந்து கூடுவதும்
நட்புகள் இணைந்து மகிழ்விப்பதும்
பழக்கங்கள் முகம்காட்டி பூரிப்பதும்
சான்றோர்கள் மனநிறைந்து வாழ்த்துவதும்
                                               திருமண நாளே!
நீரும், நிலமும் போலவும்
கொடியும், மலரும் போலவும்
என்றும் இணைபிரியாது வாழ்ந்திடவும்
என்றும் அன்பு நிறைந்திடவும்
             இனிய திருமண நல்வாழ்த்துக்கள்...!

         








Comments