தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகை முத்துக்கள் [ 06 ] கவிதை



                     தூரிகை  முத்துக்கள்   [  06 ] கவிதை

                     











அன்பு தேடி வரும் குழந்தைகள்
அறிவு நாடி வரும் மாணக்கர்
உயர்வு வழியைக் காட்டும் இதயங்கள்
உண்மையை விளக்கும் கண்ணாடி உள்ளங்கள்
                                           ஆசிரியர்களே !
வாழ்க்கை ஒளியை ஏற்றி வைப்பதும்
வாழ்வு பாதையை தெளிவுப் படுத்துவதும்
சிந்தனை விதையை விதைக்கச் செய்வதும்
திறமையை வெளியே கொணர வைப்பதும்
                                                ஆசிரியர்களே!
அறியாமை இருள் அகற்றி நிற்பதும்
ஒழுக்க வழியில் செல்ல வைப்பதும்
அடக்கம் பின்பற்ற வைத்து காப்பதும்
சமுகப் பணியை அறியச் செய்வதும்
                                       ஆசிரியர் களே!
அறிவு களஞ்சியம் ஆக்கிய
ஒழுக்க கொடியாக மாற்றிய
          ஆசிரியப் பெருக்களை
          நினைவிற் கொள்வோமாக !
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
                           


தெய்வத்தை உள்ளத்தால் நினைத்திடுவோம்
தெய்வ அருளை பெற்றிடுவோம்
இருள்  மாந்தரை மறந்திடுவோம்
அருள் மாந்தரை வணங்கிடுவோம்
       மனம் தூய்மை பெற்றிடவும்
       உடைமை அரோக்கியம் பெற்றிடவும்
       நேர்த்தி வழியில் சென்றிடவும்
       மெய்மை செயலில் சென்றிடவும்
இல்லறம் பூந்தோட்டமாக இருந்திடவும்
இல்வாழ்க்கை இனிதாக அமைந்திடவும்
உறவுகள் பிரியாது வாழ்ந்திடவும்
நட்புகள் இணை நிறைந்திடவும்
       மனிதனின் செயல் சிறந்திட
       மாந்தரின் சொல்லில் உண்மையிருந்திட
தெய்வத்தின் முதல் கடவுளான
தெய்வ விநாயகரை வணங்கி
      அருளொளி பெற்றிடுவோமாக.... !

கலையால் உருவானது உயிரினம்
கலையால் உண்டானது நாகரீகம்
கலையால் தொடங்கிய வாழ்க்கை
கலையால் அமைந்தது இல்லறம்
      கலையால் அறிந்தது எழுத்துக்கோடுகள்
      கலையால் நெய்யப்பட்டது ஆடையே
      கலையால் ஒழுக்கம் அமைந்தது
      கலையால் அமைந்தது கோவில்கள்
      கலையால் செதுக்கியது இறைமுகம்
                                                              என்பர்!
சுத்தம் தொழிலை சிறப்பாக்கும்
தூய்மை ஆரோக்கியம் கொடுக்கும்
தொழில் ஆயுதத்தின் செயலாகும்
தொழில் கலையின் உணர்வாகும்
                                                    என்பர்!
கலைக்கூடம் தூய்மை பெறவும்
தொழில்கூடம் இருள் விலகுவதும்
தொழிலின் ஆயுதம் சுத்தமாவதும்
இல்லறம் தெய்வீகக் கூடமாவதும்
                      ஆயுத பூஜை விழா
                      கலைமகள் அருளும் நாளே!
கலைமகள் அருள் பெறுவோம்
கலையாக வாழ்க்கையில் பயணிப்போமாக..... !
                                  



Comments