காலம் 102 - கவிதை
காலத்தை கொடுத்த இயற்கையும்
காலத்தை நகர்த்தும் மண்ணுலகமும்
காலத்தில் வாழ்விக்கும் மனிதயினமும்
காலத்தில் ஓடவைக்கும் வாழ்க்கையும்
பூத்து குலுங்குவது சிறுவயதின் விளையாட்டும்
புத்துணர்வு கொடுப்பது இளமை உடைமையும்
பூமலராக மலர்வது இல்லற வாழ்வும்
புன்னகை பூமாலை ஆவதும் செயலும்
வாழ்க்கை நகர்விலே!
நட்பு முறை திடமாவதும்
உறவு முறை விழுதாவதும்
பழக்க முறை வேறாவதும்
நினைவின் பதிவு கிளையாவதும்
காலத்தின் நகர்வே!
வாழ்க்கை பாதையில் தடுமாற்றமாவதும்
வாழ்வின் செயலில் பயமாவதும்
மனிதனின் உடைமை அச்சமாவதும்
மனிதவுயிர் ஒளி பிழப்பாவதும்
காலத்தின் நகர்வே!
நிலையன எண்ணத்தில்
நிறைவான செயலில்
அழுத்தமான சொல்லில்
நேர்த்தியான பாதையில்
பயணித்து மகிழ்வு பெறுவோமாக...!
Comments
Post a Comment