தீபாவளி - 2024
பாகுபாடு இல்லாது அனைவரும் கொண்டாடுவது
ஆண்டின் சிறப்பு திருவிழாவாக கொண்டாடுவது
உள்ளம் ,முகம் மகிழ்வு பொலிவாவதும்
உறவின் சந்திப்பில் பூரிப்பாவதும்
தீபாவளி திருநாளே !
புதுஉறவு இணைந்து மகிழ்ச்சியாவதும்
புத்தாடை உடுத்தி எழுச்சியாவதும்
இனிப்பால் பகிர்வு கொள்வதும்
பண்பால் முகமலர்ச்சி தோன்றுவதும்
தீபாவளி திருநாளே!
தீபவொளி இருளை போக்கி
அருளொளி பெறச் செய்வதும்
நட்புமுறை கண்டு மகிழ்ச்சியாக்கி
நல்வழி பிறக்கச் செய்வதும்
மனதில் பதியும் திருநாள்
உருண்டோடும் வாழ்வில் திருநாள்
இல்லம் வானவில்லாக காட்சியாவதும்
வாசலில் பூச்சரமாக மின்னுவதும்
தீபாவளி நாளே!
அன்பு இதய வழியில்
நட்பு இணை பாதையில்
நேர்வு வாழ்வில் அமைவில்
உண்மை செயல் வடிவில் இருந்து
மகிழ்ந்து கொண்டாடுவது
தீபாவளி திருநாளே !
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!
ReplyForward |
Comments
Post a Comment