புத்தாண்டு 107 கவிதை
365 நாளை சுமந்து வருபவள்
12 மாதம் பெயரில் இருப்பவள்
48 வாரம் பிரிவில் நடப்பவள்
8760 மணி நேரம் தங்குபவள்
2025 பொன்மகளே!
இல்லம் தோறும் குடிக் கொள்பவள் I
இல்லத்தில் நினைவுச் சுவடு பதிப்பவள்
மாந்தரை மகிழ்ச்சி புன்னகை தருபவள்
மாந்தரின் பயணப் பாதை காட்டுபவள்
2025 பொன்மகளே!
வண்ண ஓவியமாகவும்
கலையின் சிற்பமாகவும்
ஒழுக்கத்தில் நதியாகவும்
ஈகையில் விண்ணாகவும்
இருக்கச் செய்திடவாய் மாந்தரை
மாந்தரின் செயல் நேர்த்தியாகவும்
மாந்தரின் சொல் தூய்மையாகவும்
மாந்தரின் நடத்தை களவுயில்லாதும்
மாந்தரின் கடமையில் நச்சுகலவாதும்
இருக்கச் செய்திடவாய்
இரண்டாயிரத்து இருபத்தைந்து
புத்தாண்டு பொன்மகளே!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment