பொங்கல் 108 கவிதை
தமிழர்களின் இனிய புத்தாண்டு நாளும்
தமிழர்களின் மரபை உணர்த்தும் நாளும்
தமிழர்களின் பண்பாடு, வீரம் வெளிப்படுத்தும்
திருநாளே !
உழவர்களின் உழைப்பைக் கொண்டாடும் திருநாள்
உழவர்கள் பூமாதேவியை நேசித்துப் பூஜிப்பதும்
உழவர்கள் ஆதவனை வணங்கி நிற்பதும்
உழவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும்
திருநாளே!
இல்லத்தின் வாசலில் வண்ணக் கலையாவதும்
இல்லத்தில் பழையன கழித்து தூய்மையாவதும்
உடைமையின் அழுக்கை நீக்கச் செய்வதும்
உள்ளத்தில் இறையருள் நிறைந்து அருவளுவதும்
இல்லத்தில் மங்களம் நிறைந்து மகிழ்வதும்
கோவிலில் இறையருள் பாடலோசை எழுச்சிப்பதும்
சிந்தையில் இருளொளி அகற்றி நிற்பதும்
இதயத்தில் புதிய அருளொளி பெறுவதும்
பொங்கல் திருநாளே!
பொங்கல் பொங்கி வருவது போலவும்
தித்திக்கும் கரும்பின் சுவை போலவும்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி
மகிழ்ந்து பயணிப்போமாக.....!
Comments
Post a Comment