குழந்தையின் உள்ளம் கலங்கமில்லாதது
சிறுவனின் உள்ளம் பால்போன்றது
இளைஞனின் உள்ளம் தேன்போன்றது
இல்லறத்தான் உள்ளம் நேசமானது
சான்றோர் உள்ளம் அருளானது
கலங்கமில்லா உள்ளம் புன்னகையாவதும்
பால்போன்ற உள்ளம் அஞ்சுவதும்
தேன்போன்ற உள்ளம் இன்பமாவதும்
நேசமான உள்ளம் சிந்திப்பதும்
என்பர்!
பிறப்பின் போது உள்ளம் பூவானது
வளர்ப்பின் போது உள்ளம் கொடியானது
நல்வழியின் போது உள்ளம் சித்திரமானது
சான்றோர் வழியின் போது தெய்வமாகிறது
சொல்லின் போது உள்ளத்தில் பதிவாகிறது
செயலின் போது உள்ளத்தில் திடமாகிறது
நடத்தையின் போது உள்ளம் முடிவாகிறது
நட்பின் போது உள்ளம் தெளிவாகிறது
தூய்மை உள்ளமாகவும்
நஞ்சு கலவாததாகவும்
தீயவழியில் செல்லாததாகவும்
உள்ளம் கலைக்கூடமாக பாவித்து
உயர்ந்த சிறப்பை பெறுவோமாக... !
ReplyForward |
Comments
Post a Comment